தங்கையை பார்த்து பேச முடியவில்லை - ராஷ்மிகா வருத்தம்


தங்கையை பார்த்து பேச முடியவில்லை - ராஷ்மிகா வருத்தம்
x

தங்கையின் குறும்புத்தனத்தை மிகவும் ரசிப்பேன் என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

'நேஷனல் கிரஷ்' என்று புகழப்படும் நடிகை ராஷ்மிகா, தற்போது அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகிறார். தற்போது தெலுங்கில் 'கேர்ள் பிரண்ட்' மற்றும் இந்தியில் 'தாமா' என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தனது மனதில் பூட்டிவைத்துள்ள விஷயம் குறித்து ராஷ்மிகா மனம் திறந்துள்ளார்.

அவர் கூறும்போது, ''எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவளுக்கு 13 வயது. என்னைவிட 16 வயது குறைந்தவள். அவளை எனக்கு மிகவும் பிடிக்கும். அவளது குறும்புத்தனத்தை மிகவும் ரசிப்பேன். தற்போது படங்களில் பிசியாக இருப்பதால், என்னால் அவளை பார்த்து ஆசையாக பேசக்கூட முடியவில்லை. 8 வருடங்களாக அவளை என்னால் பார்க்கவே முடியவில்லை.

ஓய்வு எடுத்துக்கொண்டு அவளை பார்க்கவேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் ஒப்புக்கொண்ட பணிகள் முன்வந்து நிற்பதால் எதற்கும் என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை'' என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story