''எனக்கு அந்த கெட்ட பழக்கம் இருக்கு'' - தனுஷ் பட நடிகை...ரசிகர்கள் அதிர்ச்சி


I have that bad habit - Dhanushs film actress...Fans shocked
x

இவர் கடந்த 2016-ம் ஆண்டு மலையாள திரைப்படமான ''பாப்கார்ன்'' மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

சென்னை,

சமீபத்தில், ஒரு நட்சத்திர நடிகை தனது கெட்ட பழக்கம் குறித்து அதிர்ச்சியூட்டும் கருத்துகளை வெளியிட்டார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த நடிகை வேறு யாருமல்ல, சம்யுக்தா மேனன்தான்.

கடந்த 2016 ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான ''பாப்கார்ன்'' மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர சம்யுக்தா. அதில் அவர் ஷைன் டாம் சாக்கோவுடன் நடித்தார். பின்னர் 'பீம்லா நாயக்' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். அதன் பிறகு, 'பிம்பிசாரா', 'சார்' மற்றும் 'விருபக்சா' போன்ற சூப்பர் ஹிட் படங்களின் மூலம் தெலுங்கு பார்வையாளர்களுக்கு நெருக்கமாகிவிட்டார்.

தமிழில் இவர் தனுஷுடன் வாத்தி படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில், சம்யுக்தா சமீபத்தில் தனக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாகக் கூறினார். தினமும் மது அருந்துவதில்லை, மன அழுத்தம் அல்லது பதட்டம் ஏற்படும்போது கொஞ்சம் குடிப்பேன் என்று சம்யுக்தா கூறினார். இந்தக் கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதற்கு நெட்டிசன்கள் பல வகையான கருத்துகளை பகிர்ந்து வருகின்றன

1 More update

Next Story