'புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தேன்'- ரேஷ்மா


I initially refused to play the role of Pushpa- Reshma
x

'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரேஷ்மா .

சென்னை,

சீரியல்களில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. ஒரு சில படங்களிலும் இவர் நடித்துள்ளார். அதன்படி, விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது இவருக்கு பெயரை வாங்கி கொடுத்தது.

மேலும், விமல் நடிப்பில் ஓடிடியி வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற 'விலங்கு' வெப்சீரிஸில் கிச்சாவின் மனைவியாக ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருந்தார்.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சி கலந்துகொண்டு பேசிய ரேஷ்மா, புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்ததாக கூறினார். அவர் கூறுகையில்,

'புஷ்பா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க மறுத்தேன். ஆனால், இயக்குனர் கிளாமர் சீன் ஒன்றுமில்லை, நடிக்கலாம் என்று சொன்னார். அதனால்தான் நடித்தேன். ஆனால், இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை' என்றார்.

1 More update

Next Story