'வொய் திஸ் கொலவெறி’ - "வேடிக்கையாக உருவாக்கினோம்... வைரல் ஆகிவிட்டது" - தனுஷ்

’வொய் திஸ் கொலவெறி’ பாடலை விளையாட்டாக உருவாக்கியதாக தனுஷ் கூறினார்.
சென்னை,
துபாய் வாச் வீக் நிகழ்வில் ’வொய் திஸ் கொலவெறி’ பாடல் பற்றி தனுஷ் பேசியது வைரலாகி வருகிறது. அவர் பேசுகையில்,
’வொய் திஸ் கொலவெறி’ பாடலை விளையாட்டாகதான் உருவாக்கினோம். ஒரு சிறு பகுதியை மட்டுமே அதில் உருவாக்கிவிட்டு பின்பு அதனை சுத்தமாக மறந்துவிட்டோம். ஒருநாள் எதிர்பாராத விதமாக அதனை கேட்ட பொழுது வேடிக்கையாக இருந்தது
அனிருத்திடம் சில நேரங்களில் வேடிக்கையானது கூட ஓர்க் அவுட் ஆகும் என்று சொன்னேன். பின்பு அதனை படமாக்கினோம்
’வொய் திஸ் கொலவெறி’ தமிழில் மட்டும் பிரபலம் ஆகும் என நினைத்தேன். ஆனால் அந்தப் பாடல் உலக அளவில் வைரல் ஆனது. நான் அந்தப் பாடலை விட்டு விலகினாலும், அந்தப் பாடல் என்னை விடாமல் தரத்திக்கொண்டே இருக்கிறது’ என்றார்.
Related Tags :
Next Story






