’எனக்கு அந்த வகை படங்கள் ரொம்பப் பிடிக்கும்’ - நாக சைதன்யா


I love romantic films - Naga Chaitanya...
x
தினத்தந்தி 21 Nov 2025 1:45 PM IST (Updated: 21 Nov 2025 1:46 PM IST)
t-max-icont-min-icon

காதல் படங்கள் காலத்தால் அழியாதவை என்று நாக சைதன்யா கூறினார்.

சென்னை,

ஒரு நடிகராகவும் ரசிகராகவும் காதல் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று நாக சைதன்யா கூறினார்.

நடிகை ஆனந்தி 'பிரேமண்டே' என்ற புதிய படத்தில் நடித்து இருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் நவநீத ஸ்ரீராம் இயக்குநராக அறிமுகமாகிறார். தெலுங்கு ஹீரோ பிரியதர்ஷி புலிகொண்டா கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

காதல் மற்றும் நகைச்சுவை படமாக இருக்கும் இதனை ஜான்வி நரங் மற்றும் புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர்.இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.

இதற்கிடையில் நடந்த இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் நாக சைதன்யா மற்றும் இயக்குனர் சேகர் கம்முலா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது பேசிய நாக சைதன்யா, காதல் படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறினார்.

அவர் பேசிகையில், ‘கோவிட்-க்குப் பிறகு, ஆச்சன் மற்றும் புதுவிதமான படங்கள் மட்டுமே பார்வையாளர்களை கவரும் என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் காதல் படங்களும் வெற்றி பெறும் என்று சமீபத்திய படங்கள் மீண்டும் நிரூபித்துள்ளன. காதல் படங்கள் காலத்தால் அழியாதவை" என்றார்.

1 More update

Next Story