’ராயன் படத்தை தவறவிட்ட மற்றொரு நடிகர்


I missed the movie Rayan... says leading actor
x
தினத்தந்தி 24 Oct 2025 7:03 AM IST (Updated: 24 Oct 2025 7:21 AM IST)
t-max-icont-min-icon

ராயன் படத்தில் தான் நடிக்கவிருந்ததாக அவர் கூறினார்.

சென்னை,

பிரவீன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஆர்யன். இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன், மானசா சவுத்ரி உள்பட பலர் நடித்து உள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்து உள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வருகிற 31-ந்தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புரமோஷனின்போது, ராயன் படத்தில் தான் நடிக்கவிருந்ததாக விஷ்ணு விஷால் கூறினார். அவர் கூறுகையில்,

"ராயன் படத்தில் சந்தீப் கிஷனின் கதாபாத்திரத்தில் நான் நடிக்கவிருந்தேன். அந்த கதாபாத்திரத்தை எனக்காக மீண்டும் எழுதச் சொன்னேன். தனுஷ் சார் உடனடியாக ஒப்புக்கொண்டார், எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும், எனக்கு தேதிகள் பிரச்சினைகள் இருந்தன, அதனால் நடிக்க முடியவில்லை" என்றார். முன்னதாக இதே கதாபாத்திரத்தில் நடிக்க ஜிவி பிரகாஷ் நடிக்க மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story