’எனக்கு அந்த மாதிரி படங்கள் ரொம்ப பிடிக்கும்’ - ராசி கன்னா

முன்னதாக ராசி கன்னா பேசிய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
சென்னை,
சமீபத்தில் "தெலுசு கடா" படத்தில் நடித்திருந்த ராசி கன்னா, அடுத்து பவன் கல்யாணின் "உஸ்தாத் பகத் சிங்" படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், முன்னதாக ராசி கன்னா பேசிய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
அவர் கூறுகையில், 'நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நமக்கு வாய்ப்பு கிடைத்தால், அந்தப் படம் நம் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கும். அது ஒரு நடிகையாக நிரூபிக்க இன்னொரு வாய்ப்பை எனக்கு கொடுக்கும்.
அதேபோல் வணிகப் படங்கள் மிகவும் பிடிக்கும். வணிகப் படங்களுக்கு உடனடியாக ஓகே சொல்லிவிடுவேன். இதுபோன்ற படங்களில் நிறைய நடிக்க விரும்புகிறேன் " என்றார்.
Related Tags :
Next Story






