மீண்டும் குத்தாட்டம் போட விரும்புகிறேன்- நடிகை ரம்யா கிருஷ்ணன்

நான் ஆடிய எல்லா ஐட்டம் பாடல்களையும் மீண்டும் ஆடுவதற்கு விரும்புகிறேன் என்று ரம்யா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என திரை உலகில் 4 தலைமுறைகளாக கதாநாயகி, வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். படையப்பாவில் நீலாம்பரி, பாகுபலி சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிகர்களை மிரள வைத்தது. அவர் ஏற்று நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவம் பெற்று வருகிறது.
55 வயதிலும் பன்முக திறமையான நடிப்பால் திரை உலகை அதிர வைத்து வரும் ரம்யா கிருஷ்ணன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், நான் ஆடிய எல்லா ஐட்டம் பாடல்களையும் மீண்டும் ஆடுவதற்கு விரும்புகிறேன். பாகுபலி படத்தில் நான் நடிப்பதற்கு 40 நாட்கள் கால் சீட் கேட்டபோது முடியாது என்று சொன்னேன். ஆனால் கதையை கேட்டவுடன் கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்தேன். நான் உண்மையிலேயே ஒரு ராஜ மாதா போல உணர்ந்தேன். இவ்வாறு தன்னம்பிக்கையோடு பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்.






