ரவி தேஜாவுடன் மீண்டும் ஜோடி…படத்தில் மறைந்துள்ள ‘சர்ப்ரைஸ்’ - நடிகை டிம்பிள் ஹிண்ட்

இப்படம் வருகிற 13-ம் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
டிம்பிள் ஹயாதி தற்போது ரவி தேஜாவுக்கு ஜோடியாக ’பாரத மகாசாயுலகு விக்ஞாப்தி’ (பிஎம்டபிள்யூ) படத்தில் நடித்துள்ளார். கிஷோர் திருமலா இயக்கி இருக்கும் இப்படம் வருகிற 13-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில், தனது கதாபாத்திரம் மற்றும் ரவி தேஜாவுடன் பணியாற்றுவது பற்றி டிம்பிள் ஹயாதி பேசினார். இயக்குநர் கிஷோர் திருமலா கதை சொன்ன உடனேயே அந்தக் கதை தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக நடிகை டிம்பிள் தெரிவித்தார். கதை கேட்டு முடித்த பிறகு, படத்தில் மனைவியாக வரும் பாலாமணி கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஏற்கனவே ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில், இந்த வேடம் தனக்கு முற்றிலும் புதிதாக இருந்ததாக டிம்பிள் விளக்கினார். மேலும், ரவி தேஜாவுடன் இது தனது இரண்டாவது படம் என குறிப்பிட்ட அவர், அவருடன் இணைந்து பணிபுரிவது எப்போதும் மகிழ்ச்சியான அனுபவமாக இருப்பதாக தெரிவித்தார்.
இந்தப் படத்தின் கதையில் ஒரு ஆச்சரியமான அம்சம் இடம்பெற்றுள்ளதாக கூறிய டிம்பிள் , அதை ரசிகர்கள் பெரிய திரையில் கண்டிப்பாக அனுபவிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.






