அவருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தபோது பதறினேன்- நடிகர் ஆதித்யா மாதவன்

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் ஆதித்யா மாதவன் "அதர்ஸ்" என்ற படத்தில் நடித்துள்ளார்.
அவருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தபோது பதறினேன்- நடிகர் ஆதித்யா மாதவன்
Published on

சென்னை,

மருத்துவத்துறையை மையப்படுத்தி, கிரைம் திரில்லர் கதைக்களத்தில் 'அதர்ஸ்' என்ற பெயரில் புதிய படம் தயாராகி இருக்கிறது. ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை அபின் ஹரிஹரன் இயக்கியுள்ளார். கிராண்ட் பிக்சர்ஸ் முரளி தயாரித்துள்ளார். ஜி.கார்த்திக் இணைந்து தயாரித்துள்ளார்.

விரைவில் வெளியாகும் இப்படம் குறித்து ஆதித்யா மாதவன் கூறும்போது, போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். மருத்துவத்துறையில் நடக்கும் முக்கிய குற்றத்தை பற்றிய கதை இது. சமூக கருத்துகளுடன் உள்ளடக்கி உருவாகி இருக்கிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் கலை கற்றதால், சண்டை காட்சிகளில் இன்னும் உத்வேகத்துடன் பணியாற்ற முடிந்தது. காக்கிச்சட்டை அணியும்போதே எனக்கும் ஏற்பட்ட சிலிர்ப்பை சொல்லமுடியாது. அதேபோல கவுரி கிஷன் உடன் நடித்த காட்சிகளும் எனக்கு சவாலாக அமைந்தது. நெருக்கமான காட்சிகளில் நடித்தபோது நான் பதறியது எனக்குத்தான் தெரியும்'', என்றார்.

அபின் ஹரிஹரன் கூறுகையில், 'தேவையற்ற காட்சிகள் படத்தில் இருக்காது. அதனால்தான் காதல் காட்சிகளை கூட பெரியளவில் குறைத்திருக்கிறோம்'', என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com