’என் மகளுக்கு 5 பைசா கூட கொடுக்க மாட்டேன்’ - நடிகை ஸ்வேதா மேனன்

குழந்தைகளுக்கு கோடிகள் அல்ல, அன்பும் நல்ல நினைவுகளும்தான் தேவை என ஸ்வேதா மேனன் கூறினார்.
சென்னை,
பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன் சமீபத்தில் (AMMA) மலையான திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்றில் இந்தப் பதவியை வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். 13 வயதில் திரைப்படங்களில் நுழைந்த ஸ்வேதா ஒரு மாடலாகவும் நடிகையாகவும் சிறந்து விளங்கினார்.
அவர் மலையாளம், தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். அவர் சமீபத்தில் தனது தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
’எனக்கு ஒரே ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது. நான் அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். நான் என் மகளுக்கு ஐந்து பைசா கூட கொடுக்க மாட்டேன். அவள் என்னைச் சார்ந்து இல்லாமல் வளர வேண்டும் என்பதே என் விருப்பம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காகப் பணத்தைச் சேமித்து அவர்களின் வாழ்க்கையை நாசமாக்குகிறார்கள். இது அவர்கள் செய்யும் மிகப்பெரிய தவறு.
பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையை முதலில் அனுபவிக்க வேண்டும். குழந்தைகள் அதைப் பார்த்து வளர்வார்கள். குழந்தைகளுக்குத் தேவையானது கோடிகள் அல்ல, அன்பும் நல்ல நினைவுகளும்தான். அவர்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து அவர்களுக்குப் பிடித்த துறையை நோக்கிச் செல்ல விட வேண்டும்’ என்றார்.






