பவன் கல்யாண் இந்திய பிரதமரானாலும் ஆச்சரியமில்லை - நடிகை நிதி அகர்வால்


பவன் கல்யாண் இந்திய பிரதமரானாலும் ஆச்சரியமில்லை   - நடிகை நிதி அகர்வால்
x
தினத்தந்தி 22 Jan 2026 6:07 PM IST (Updated: 22 Jan 2026 6:10 PM IST)
t-max-icont-min-icon

சினிமாவில் இருந்து அரசியலுக்கு பவன் மாறியது திடீர் மாற்றமாகத் தெரியவில்லை என்று நடிகை நிதி அகர்வால் கூறியுள்ளார்.

பாலிவுட் படமான ‘முன்னா மைக்கேல்’ மூலம் கதாநாயகியாக அறிமுகமான நிதி அகர்வால், பின்னர் தெலுங்கில் அறிமுகமானார். அதன் பிறகு, தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன், ரவி மோகனுடன் பூமி ஆகிய படங்களில் நடித்துள்ளார். பவன் கல்யாணுடன் ‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தில் நடித்த பிறகு தனக்கு பல நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கியதாக நிதி அகர்வால் கூறியுள்ளார். பிரபாஸ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பவண் கல்யாண் குறித்து பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது, “பவன் கல்யாண் ஒழுக்கமான மனிதர். அவரது நோக்கம், தெளிவு மற்றும் மக்களுடனான தொடர்பு... அவர் ஒரு நாள் இந்தியாவின் பிரதமரானால் கூட எனக்கு ஆச்சரியமில்லை. சினிமாவில் இருந்து அரசியலுக்கு அவர் மாறியது ஒரு திட்டமிடப்பட்ட அல்லது திடீர் மாற்றமாகத் தெரியவில்லை. அது அவரது நீண்டகால பொது வாழ்க்கையின் ஒரு நீட்சியாகவே இருந்தது. 1990-களில் தொடங்கிய அவரது சினிமா வாழ்க்கை, மக்களுடன் கலக்க உதவியது. இந்த குணம் அவரது அரசியல் பயணத்தை வலுப்படுத்தியுள்ளது” என்றார்.

இவரது கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து ஒரு சிலர் ஆதரவாகவும் ஒரு சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பவன் கல்யாண் தற்போது ஆந்திரவின் துணை முதல்வராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story