''இட்லி கடை'' படத்தின் இசை வெளியீட்டு விழா....வெளியானது அறிவிப்பு


Idli Kadai audio launch on this date
x
தினத்தந்தி 9 Sept 2025 4:45 AM IST (Updated: 9 Sept 2025 12:30 PM IST)
t-max-icont-min-icon

ப.பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் இயக்கும் நான்காவது படமாக இது உருவாகி இருக்கிறது.

சென்னை,

தனுஷின் ''இட்லி கடை'' படம் அக்டோபர் 1-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 14-ம் தேதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெறும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர்கள் அருண் விஜய், சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் ஆகியோரின் கேரக்டர் போஸ்டர்கள் கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி, அருண் விஜய் அஸ்வினாகவும், சத்யராஜ் விஷ்ணு வர்தனாகவும், ராஜ்கிரண் சிவநேசனாகவும் நடித்திருக்கின்றனர்.

ப.பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் இயக்கும் நான்காவது படமாக இது உருவாகி இருக்கிறது. நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் பார்த்திபன் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

1 More update

Next Story