''இட்லி கடை'' பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பரபரப்பு

''இட்லி கடை'' படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது.
கோவை,
கோவையில் நடந்து வரும் 'இட்லி கடை' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின்போது பாதுகாப்பை மீறி தனுஷ் ரசிகர் ஒருவர் மேடையில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
'ஒரே ஒரு போட்டோ..' என ரசிகர் வைத்த கோரிக்கையை ஏற்று அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் தனுஷ். பின்னர், பவுன்சர்கள் அந்த ரசிகரை அப்புறப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனுஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் இட்லி கடை. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது.






