"அப்பா ஓகே சொன்னால் நான் ரெடி" - ஸ்ருதிஹாசன்


If Dad says okay, Im ready to act - Shruti Haasan
x
தினத்தந்தி 25 May 2025 6:56 AM IST (Updated: 25 May 2025 7:50 AM IST)
t-max-icont-min-icon

'தக் லைப்' பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மும்பையில் இருந்து சென்னை வந்திருந்தார் ஸ்ருதிஹாசன்.

சென்னை,

அப்பாவுடன் சேர்ந்து நடிக்க தான் தயாராக உள்ளதாகவும், அவர் சம்மதித்தால் எப்பொழுது வேண்டுமானாலும் நடிக்க ரெடிதான் என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

'தக் லைப்' பட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மும்பையில் இருந்து சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய ஸ்ருதிஹாசன், நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் 'கூலி' திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்ததாக ஸ்ருதிஹாசன் மகிழ்ச்சி தெரிவித்தார்.

கடந்த 1997-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'சாச்சி 420' மற்றும் 2000-ம் ஆண்டு வெளியான 'ஹே ராம்' ஆகிய படங்களில் ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story