'1 சதவீதம் பூர்த்தி செய்ய தவறினாலும்'....`தி ராஜா சாப்' பட விழாவில் சவால்விட்ட இயக்குனர்

இப்படம் தமிழில் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது.
சென்னை,
இந்திய அளவில் முன்னணி நடிகரான பிரபாஸ், அடுத்து ’தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார். இந்த ஹாரர்-நகைச்சுவை திரைப்படத்தை மாருதி இயக்கியுள்ளார். பீப்பிள் மீடியா பேக்டரி தயாரித்துள்ள இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கின்றனர்.
சஞ்சய் தத், போமன் இரானி, ஜரினா வஹாப் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழில் ஜனவரி 10-ம் தேதி வெளியாகிறது. மற்ற மொழிகளில் 9-ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், நேற்று இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய இயக்குனர், `தி ராஜா சாப்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளில் 1சதவீதம் பூர்த்தி செய்யத் தவறினாலும் கேள்வி கேட்களாம் என்று கூறினார். அதோடு தன் வீட்டு முகவரியை கொடுத்து ரசிகர்கள் நேராக அங்கேயே வரலாம் என்றும் சவால்விட்டார்.






