மகா​பாரதப் போரில் கர்ணன் பாண்​ட​வர்​களு​டன் சேர்ந்திருந்​தால் ... - இயக்குநர் ஹனு ராகவபுடி

பிரபாஸின் ‘பௌஜி’ படத்தில் சமஸ்கிருத ஸ்லோகங்கள் இடம்பெற போர்​வீரனைப் பற்​றிய கதையே காரணம் என இயக்குநர் ஹனு ராகவபுடி கூறியுள்ளார்.
மகா​பாரதப் போரில் கர்ணன் பாண்​ட​வர்​களு​டன் சேர்ந்திருந்​தால் ... - இயக்குநர் ஹனு ராகவபுடி
Published on

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் பாகுபலி படத்திற்குப் பிறகு பான் இந்தியா நடிகராக கொண்டாடப்படுகிறார்.ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் எனத் தொடர்ந்து இவர் நடித்த பான் இந்திய படங்கள் பெரிதாக வரவேற்புப் பெறவில்லை. இப்போது பான் வேர்ல்ட் படமாக உருவாகி வரும் கல்கி 2898 ஏடி 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் தி ராஜா சாப். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது.

பிரபாஸ் அடுத்து, சீதா ராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் இந்த பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கிறார்கள். சமூக ஊடக பிரபலம் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் பௌஜி. இந்த பான்-இந்தியா படத்தின் டைட்டில் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் சமஸ்கிருத ஸ்லோகங்கள் இடம்பெற்றுள்ளன. இது சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குநர் ஹனு ராகவபுடி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குநர் ஹனு ராகவபுடி நாங்கள் திட்டமிட்டுதான் சமஸ்கிருத ஸ்லோகங்களை பயன்படுத்தினோம். போர்வீரனைப் பற்றிய இந்தக் கதைக்கு அது ஆழமான பொருள் தருவதால் பயன்படுத்தியுள்ளோம். மற்றபடி இது புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டதல்ல. பகவத்கீதையிலிருந்து நாங்கள் எடுத்துக் கொண்டது வெறும் தத்துவ ரீதியான ஊக்கம் மட்டுமே.

பௌஜி என்பது மனித உணர்வுகள், தேசப்பற்று மற்றும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த சமூக-அரசியல் பதற்றங்களை மையமாகக் கொண்ட அழுத்தமான அதிரடி டிராமா. இன்றும் உலகளவில் அதேபோல் எதிரொலிக்கும் உண்மைகளை இப்படம் பேசும். படத்தில் பிரபாஸ் ஒரு பெரிய வீரராக நடிக்கிறார்.

கர்ணன் பாண்டவர்களுடன் சேர்ந்து இருந்தால் மகாபாரதப் போர் எப்படி மாறியிருக்கும்? என்ற சிந்தனை தான் இந்தக் கதையின் மையக் கரு. பிரிட்டிஷ் கால பின்னணியில் நடக்கும் இந்தக் கதையில் பிரபாஸ் பல பரிமாணங்களுடன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற ஆவலாக இருக்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com