"ரூ.1 கோடி சம்பாதித்தால்...ரூ.2 கோடிக்கு பிரச்சினை வருகிறது.."- தனுஷ்

''குபேரா'' படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மாலை ஐதராபாத்தில் நடந்தது.
சென்னை,
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ''குபேரா'' படம் வருகிற 20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையில், ''குபேரா'' படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று மாலை ஐதராபாத்தில் நடந்தது. இதில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் தனுஷ் பேசுகையில், ''ரூ.150 சம்பாதித்தால் ரூ. 200-க்கு பிரச்சினை வருகிறது. ரூ.1 கோடி சம்பாதித்தால் ரூ.2 கோடிக்கு பிரச்சினை வருகிறது. அதனால், எல்லா இடங்களிலும் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது.
பிரச்சினை இல்லாத இடமே இல்லை. இ.எம்.ஐ, லோன் அப்படி என்று நிறைய பிரச்சினை இருக்கிறது. நம்மிடம் காசு, பணம் இல்லை என்றாலூம் , அம்மாவின் அன்பு எப்போதும் இருக்கும்'' என்றார்
Related Tags :
Next Story






