“நான் சிங்கிள்” - 3வது கணவரை விவாகரத்து செய்த பிரபல நடிகையின் பதிவு

நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவது முறையாக விவாகரத்து செய்ததாக அறிவித்துள்ளார்.
“நான் சிங்கிள்” - 3வது கணவரை விவாகரத்து செய்த பிரபல நடிகையின் பதிவு
Published on

உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு, ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன், மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக தன்மந்த்ரா படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். 2005-ல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

2010-ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அந்த திருமணமும் நீடிக்காமல் அவரையும் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அரிஹரா என்ற மகன் உள்ளார்.

2024 ஏப்ரல் மாதத்தில்தான் ஒளிப்பதிவாளர் விபின் புதியங்கத்தை மீரா திருமணம் செய்துகொண்டார்.

 இந்த நிலையில், தனது கணவர் விபினை நடிகை மீரா வாசுதேவனை விவாகரத்து செய்ததாக அறிவித்துள்ளார். இதுகுறித்த பதிவில், மீரா வாசுதேவன் 2025 ஆகஸ்ட் முதல் நான் சிங்கிளாகி விட்டேன். என் வாழ்க்கையின் அழகான மற்றும் அமைதியான கட்டத்தில் நான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com