'இந்திய சர்வதேச திரைப்பட விழா' இன்று கோலாகலமாக தொடங்குகிறது

56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் இன்று கோலாகலாக தொடங்குகிறது.
 photo credits: iffi
photo credits: iffi
Published on

இந்திய சர்வதேச திரைப்பட விழா (International Film Festival of India) ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், இந்த ஆண்டுக்கான 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் இன்று கோலாகலாக தொடங்குகிறது. இந்த விழா வருகிற 28ந் தேதி வரை நடைபெற உள்ளது.

இவ்விழாவில் , 81 நாடுகளைச் சேர்ந்த 240-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ளன. அதில் இந்த ஆண்டு இந்திய பனாரமாவின் கீழ் திரையிட தமிழகத்தில் இருந்து 2 திரைப்படங்கள் மற்றும் ஒரு குறும்படம் ஆகியவை தேர்வாகியுள்ளன. அதன்படி, சிவகார்த்திகேயனின் அமரன், நடிகர் அப்புக் குட்டியின் பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள ஆநிரை என்ற குறும்படம் ஆகியவை இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன.

இந்தியத் திரைப்பட விழாக்களில் முதன்மையான இவ்விழாவில் நாட்டின் முக்கிய திரைக்கலைஞர்கள் கவுரவிக்கப்படுவார்கள். அதிலும், குறிப்பாக திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், நடிகர் ரஜினிக்கு இந்த கவுரவம் வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய திரைப்பட விழாவில், மறைந்த திரைப்பட இயக்குநர்கள் குரு தத், ராஜ் கோஸ்லா, பானுமதி, ரித்விக் காதக், பூபென் ஹசாரிகா மற்றும் சலீல் சவுதரி ஆகியோரின் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com