’இருமுடி’: அந்த நட்சத்திர ஹீரோவின் திரில்லர் படத்திற்கு தலைப்பு இதுவா?


Irumudi: Is this the title for the Tollywood star hero’s upcoming thriller?
x
தினத்தந்தி 3 Dec 2025 9:30 PM IST (Updated: 3 Dec 2025 9:30 PM IST)
t-max-icont-min-icon

இந்தப் படம் தனது மகளைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லும் ஒரு தந்தையைப் பற்றியது என்று கூறப்படுகிறது.

சென்னை,

கிஷோர் திருமலா இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும் குடும்ப பொழுதுபோக்கு படமான 'பாரத மகாசாயுலகி விக்னியாப்தி' அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் ஆஷிகா ரங்கநாத் மற்றும் டிம்பிள் ஹயாதி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துவிட்ட நிலையில், ரவி தேஜா தற்போது சிவ நிர்வாணாவின் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார்.

ஒரு திரில்லர் படமாக கூறப்படும் இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் , 'இருமுடி' என்ற தலைப்பை படக்குழுவினர் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படம் தனது மகளைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லும் ஒரு தந்தையைப் பற்றியது என்று கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கும் நிலையில், அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story