விஜய் தேவரகொண்டாவின் "கிங்டம்" படம் தள்ளிப்போக இதுதான் காரணமா?

இப்படம் ஜூலை 4-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டநிலையில், திட்டமிட்டபடி படம் வெளியாகாது என்று கூறப்படுகிறது.
சென்னை,
ஏற்கனவே இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட விஜய் தேவரகொண்டாவின் "கிங்டம்" திரைப்படம் தற்போது மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
ஜூலை 4-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டநிலையில், திட்டமிட்டபடி படம் வெளியாகாது என்று கூறப்படுகிறது. இதற்கு, அனிருத் ''கிங்டம்'' படத்தின் பின்னணி இசையை இன்னும் முடிக்காததே காரணம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த மாத இறுதிக்குள் இசையை முடிக்க வாய்ப்பில்லை என்பதால் தயாரிப்பாளர்கள் மீண்டும் ரிலீஸை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளனர். இதுவரை, படத்தின் ஒரே ஒரு பாடல் மட்டுமே வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
"கிங்டம்" விஜய் தேவரகொண்டாவுக்கு ஒரு முக்கியமான படம், இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்தப் படத்தை ''ஜெர்சி'' பட புகழ் கவுதம் தின்னனுரி இயக்கியுள்ளார். பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.