5 நிமிட பாடலுக்காக பூஜா ஹெக்டேவுக்கு இத்தனை கோடி சம்பளமா?

”மோனிகா” பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
அட்லி இயக்கத்தில் அல்லுஅர்ஜுன் நடிப்பில் ”ஏஏ22xஏ6” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டு புதிய படம் உருவாகி வருகிறது. அல்லு அர்ஜுனுடன் 6 கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர். தீபிகா படுகோனே, ஜான்விகபூர், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் படத்தில் சிறப்பு பாடல் ஒன்று இடம் பெற இருக்கிறது. பாடலில் நடனமாடுவதற்கு பூஜா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. 5 நிமிடம் இடம் பெறும் படத்தின் பாடல் காட்சிக்கு பூஜா ஹெக்டேவுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கூலி படத்தில் இடம் பெற்ற ”மோனிகா” பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






