சினிமா நட்சத்திரங்களுக்கு அரசு வாகனமா?: சர்ச்சையை கிளப்பிய நடிகை - வைரலாகும் வீடியோ


Is the government a vehicle for movie stars? - Video of a famous actress goes viral
x
தினத்தந்தி 11 Aug 2025 8:39 PM IST (Updated: 11 Aug 2025 9:03 PM IST)
t-max-icont-min-icon

சமீபத்தில், விஜயவாடாவில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஒருவர் கலந்து கொண்டார்.

ஐதராபாத்,

சமீபத்தில், பவன் கல்யாணின் ''ஹரி ஹர வீரமல்லு'' படத்தில் கதாநாயகியாக நடித்த நிதி அகர்வால், அரசு வாகனத்தில் பயணித்திருந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. இது பல்வேறு விமர்சனங்களுக்குள்ளாகி இருக்கிறது.

சமீபத்தில், விஜயவாடாவில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் நடிகை நிதி அகர்வால் கலந்து கொண்டார். அதில் அவர் கலந்துகொள்ள அரசு வாகனத்தில் வந்திருந்தார். இது தொடர்பான வீடியோ வைரலாக, அரசு வாகனங்கள் எவ்வாறு சினிமா நட்சத்திரங்களுக்கு ஒதுக்கப்படுகின்றன என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பபி உள்ளனர்.

இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு நடிகை நிதி அகர்வால் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதன்படி, விழா ஏற்பாட்டாளர்கள்தான் அந்த வாகனத்தை ஏற்பாடு செய்ததாக தெரிவித்திருக்கிறார்.

மேலும், இதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் வாகனத்தைப் பயன்படுத்துமாறு எந்த அரசு அதிகாரிகளும் தன்னிடம் கூறவில்லை எனவும் கூறி இருக்கிறார்.

கடந்த மாதம் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'ஹரிஹர வீரமல்லு' படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்தார். சுமார் ஐந்து வருடங்களுக்கு பிறகு வெளியான நிதி அகர்வால் படம் இதுவாகும்.

இருப்பினும் , அப்படம் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறவில்லை என்றே சொல்லலாம். பல்வேறு விமர்சனத்திற்கு உள்ளானது.

1 More update

Next Story