சினிமாவில் 'அட்ஜஸ்ட்மெண்ட்' என்ற விஷயம் இருக்கிறதா?- நடிகை பவானிஸ்ரீ ஓபன் டாக்

நடிகை பவானி ஸ்ரீ அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் அட்ஜென்ஸ்மெண்ட் விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
சென்னை,
வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனவர், நடிகை பவானிஸ்ரீ. இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷின் தங்கையான இவர், பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி மிகவும் பிசியான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார். இதற்கிடையே, நடிகை பவானிஸ்ரீ அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் அட்ஜென்ஸ்மெண்ட் விவகாரம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது குறித்து நடிகை பவானிஸ்ரீ கூறியதாவது, "அப்படி ஒன்றை நான் சந்திக்கவில்லை. ஆனால் பெண்களின் பயமும், தயக்கமும்தான் இங்கே சிலர் தவறிழைக்க காரணம். பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய, 'மீ டூ' போன்ற பல விஷயங்கள் இருக்கிறது. ஒருவர் உங்களை தவறாக அணுகினால், அதை வெளியில் கொண்டு வந்தாலே போதுமானது. மற்றவருக்கு நடக்காமல் அதை தடுத்துவிட முடியும். எனவே இதுபோன்ற விஷயங்களில் பெண்கள் பயப்பட தேவையில்லை.
இப்போது நல்ல கதைகள்தான் இங்கே வெற்றிபெறுகிறது. கமர்சியல் படங்களிலும் கூட கதை இருந்தால்தான் மக்கள் ரசிப்பார்கள் என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. கிளாமரை மட்டுமே நம்பி எந்த கதையும் இங்கே நிற்பதில்லை. கிளாமர் தேவை என்ற மனநிலை மாறிக்கொண்டிருக்கிறது. அதனால் கிளாமர் இல்லாமலும் ஜெயிக்க முடியும் என்று நம்புகிறேன்" என்றார்.






