'என் கெரியரில் அப்படி செய்ததே இல்லை, இதுதான் முதல் முறை' - நடிகர் அல்லரி நரேஷ்


Ive never done anything like that in my career, this is the first time - Actor Allari Naresh
x

அல்லரி நரேஷ் தற்போது நடித்துள்ள படம் ’12எ ரெயில்வே காலனி’.

சென்னை,

நகைச்சுவை வேடங்களுக்குப் பெயர் பெற்ற நடிகர் அல்லரி நரேஷ் நடித்துள்ள திரில்லர் படம் 12எ ரெயில்வே காலனி. இந்தப் படத்தை நானி காசர்கட்டா இயக்கி அறிமுகமாகிறார்.

இந்த மடத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஹீரோ அல்லரி நரேஷ் சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசுகையில், 'இதுவரை நான் நகைச்சுவை படங்களில் நடித்துள்ளேன். இடையில் சில சீரியஸ் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தேன். ஆனால், என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் நானிக்கு நல்ல பெயரைக் கொண்டு வரும். நானியின் திருமணத்திற்கு இந்தப் படத்தின் வெற்றியை பரிசாக வழங்குவோம்" என்றார்.

இப்படத்தில் காமக்சி பாஸ்கர்லா, சாய் குமார், விவா ஹர்ஷா, கெட்அப் ஸ்ரீனு, சதாம், ஜீவன் குமார், ககன் விஹாரி, அனிஷ் குருவில்லா, மதுமணி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்த இப்படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற 21-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

1 More update

Next Story