கோவாவில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு: சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்

ஜெயிலர் 2 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து ஜெயிலர் திரைப்படத்தின் 2-வது பாகம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அந்த திரைப்படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. அந்த வகையில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக கோவாவில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.
இந்நிலையில், கோவாவில் ஜெயிலர் 2 படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். மேலும், ரசிகர்களுடன் சேர்ந்து நடிகர் ரஜினிகாந்த் செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.






