ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்


ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம்
x
தினத்தந்தி 14 Jan 2025 6:20 PM IST (Updated: 18 Feb 2025 6:53 AM IST)
t-max-icont-min-icon

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

சென்னை,

கடந்த 2023-ம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் நெல்சன். தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடித்து வருவதால் இதன் படப்பிடிப்பு நிறைவடந்த உடன் ஜெயிலர் 2 படப்பிடிப்பை தொடங்குவார் என்று கூறப்படுகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அடுத்த படம் குறித்த அப்டேட் வரும் 14ம் தேதி மாலை 6 மணிக்கு(இன்று) டீசராக வெளியாகும் என அறிவித்தது. அதன்படி, ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

1 More update

Next Story