“டெர்மினேட்டர்” படத்தின் அப்டேட் கொடுத்த ஜேம்ஸ் கேமரூன்

‘டெர்மினேட்டர்’ திரைப்படங்களின் வரிசையில் உருவாகும் புதிய பாகத்தில், அர்னால்ட் நடிக்கவில்லை என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் புகழ் பெற்ற பாடி பில்டராக இருந்து வந்த அர்னால்டு 1970-ல் வெளியான 'ஹெர்குலஸ் இன் நியூயார்க்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பினனர் 1984-ல் வெளியான 'தி டெர்மினேட்டர்' மூலம் ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்தார். உலகளவில் இளைஞர்கள் ஜிம்முக்கு செல்ல காரணமே அர்னால்டுதான். முன்னாள் மேயராகவும் இருந்த அர்னால்ட் தற்போது லாஸ் ஏஞ்சல்ஸில் வாழ்ந்து வருகிறார்.
பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் உருவான டெர்மினேட்டர் திரைப்படங்களுக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். இப்படங்களில், பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் நாயகனாக நடித்திருந்தார்.அறிவியல் சார்ந்த ஆக்சன் கதைகளத்துடன் உருவாகி கடந்த 1984 ம் ஆண்டு வெளியான டெர்மினேட்டர் முதல் பாகத்தில் இருந்து நடிகர் அர்னால்ட், டி-800 எனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
இந்த நிலையில், புதியதாக உருவாகும் டெர்மினேட்டர் திரைப்படத்தில் நடிகர் அர்னால்ட் நடிக்கவில்லை எனவும், புதிய தலைமுறை கதாபாத்திரங்கள் இடம்பெறுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். ஜேம்ஸ் கேமரூனின் இந்தப் புதிய அப்டேட், அதிர்ச்சியளிப்பதாக டெர்மினேட்டர் திரைப்படங்களின் ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.






