புதிய வொண்டர் வுமன் அட்ரியா அர்ஜோனாவா?


James Gunn has his say on Adria Arjona as Wonder Woman
x
தினத்தந்தி 8 July 2025 8:25 AM IST (Updated: 8 July 2025 8:40 AM IST)
t-max-icont-min-icon

அட்ரியா அர்ஜோனா வொண்டர் வுமனாக நடிக்க இருப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன.

வாஷிங்டன்,

டிசி ஸ்டுடியோஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேம்ஸ் கன் சமீபத்தில் அளித்த பேட்டியில், வொண்டர் வுமனை மையமாகக் கொண்ட ஒரு புதிய படம் உருவாக இருப்பதாக தெரிவித்தார்.

இந்தப் படம் வேறுபட்ட கதைக்களத்துடன் இருக்கும் என்பதால், டிசி ஸ்டுடியோஸ் வொண்டர் வுமனாக நடிக்க கால் கடோட்டைத் தவிர வேறு ஒரு நடிகையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இதனையடுத்து, இந்த படத்தில் அட்ரியா அர்ஜோனா வொண்டர் வுமனாக நடிக்க இருப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன.

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு ஜேம்ஸ் கன் நகைச்சுவையாக பதிலளித்திருக்கிறார். அதன்படி, சமூக வலைதளத்தில் அட்ரியா அர்ஜோனாவை தான் பின்தொடர்வதால்தான் இந்த வதந்திகளை உருவாக்குகிறார்கள் என்று கன் கூறினார்.

''தி பெல்கோ எக்ஸ்பிரிமென்ட்'' படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றியதிலிருந்து, கடந்த ஏழு ஆண்டுகளாக அர்ஜோனாவைப் பின்தொடர்ந்து வருவதாக கன் விளக்கினார். மேலும், அர்ஜோனா ஒரு சிறந்த வொண்டர் வுமனாக இருப்பார் என்றும் கூறினார்.

1 More update

Next Story