திரையுலகில் சோகம்...பிரபல இளம் நடிகர் தற்கொலை...காரணம் என்ன?

இவரது உயிரிழப்பு அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
மும்பை,
பிரபல இந்தி ஓ.டி.டி. தொடர் “ஜாம்தாரா 2”-இல் நடித்த மராத்தி நடிகர் சச்சின் சந்த்வாடே தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
25 வயதான இளம் நடிகரான அவர், ஜல்கான் மாவட்டத்தின் பாரோலா பகுதியில் உள்ள உந்திர்கேடா கிராமத்தில் அமைந்த தனது இல்லத்தில் கடந்த 23-ஆம் தேதி மாலை தூக்கிட்டநிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு, துலே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரது உடல்நிலை மோசமடைந்து மறுநாள் அதிகாலை உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இவரது உயிரிழப்பு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன், தனது அடுத்த மராத்தி படம் “அசுர்வன்” போஸ்டரை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






