திருமணத் திட்டங்கள்...மனம் திறந்த ஜான்வி கபூர்


Janhvi Kapoor on her wedding plans: ‘There is a lot of time’
x

ஜான்வி கபூர் தற்போது ''சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி'' படத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

கடைசியாக ''பரம் சுந்தரி'' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஜான்வி கபூர் தற்போது ''சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி'' மற்றும் ''ஹோம்பவுண்ட்'' படங்களில் நடித்துள்ளார். இதில், 'சன்னி சன்ஸ்காரி கி துளசி குமாரி' படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் நேற்று மும்பையில் வெளியிடப்பட்டது. இப்படம் திருமணத்தை மையமாகக் கொண்டிருப்பதால், ஊடகங்கள் ஜான்வியிடம் அவரது திருமணத் திட்டங்கள் குறித்து கேட்டன.

அதற்கு அவர் பதிலளிக்கையில், '' இப்போது எனது திட்டமெல்லாம் படங்களைப் பற்றிதான். திருமணத்திற்கு திட்டமிட நிறைய நேரம் இருக்கிறது'' என்றார்.

மறுபுறம், ராம் சரணுடன் பெத்தி படத்திலும் ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.

1 More update

Next Story