ஜித்தன் ரமேஷ் நடிக்கும் “ஹைடன் கமெரா” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு


ஜித்தன் ரமேஷ் நடிக்கும் “ஹைடன் கமெரா” படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
x
தினத்தந்தி 25 Oct 2025 7:01 PM IST (Updated: 25 Oct 2025 7:04 PM IST)
t-max-icont-min-icon

'ஜித்தன்' ரமேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஹைடன் கமெரா' எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மூத்த மகனும், நடிகர் ஜீவாவின் சகோதரருமான ரமேஷ், ‘ஜித்தன்' படம் மூலமாக சினிமாவுக்குள் நுழைந்தார். ‘ஜித்தன்' ரமேஷ் என்றே அழைக்கப்படுகிறார். அதனைத் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாக நடித்தவர், தற்போது படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இயக்குநர் அருண்ராஜ் பூந்தனல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹைடன் கமெரா’ எனும் திரைப்படத்தில் 'ஜித்தன்' ரமேஷ், ஷாம்ஹுன், சனா கான், சம்ஹிதா வின்யா, தேவ கிருஷ்ணா, அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷஜி வி எஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டொக்டர் வி பி சந்திரபாபு மற்றும் ஸ்ரீ நிகேத் விஷால் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரெலாக்ரோ புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஷாம்ஹுன் தயாரித்திருக்கிறார். கிருஷ்ணா தவா கதாநாயகியாக நடிக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்காக காத்திருக்கும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை கதையின் நாயகனான ஜித்தன் ரமேஷின் பிறந்த நாளன்று படக்குழுவினர் வெளியிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பர்ஸ்ட் லுக்கில் நடிகர் ஜித்தன் ரமேஷ் - நவ நாகரிக உடையுடன் புகை பிடிப்பது போன்ற தோற்றத்தில் தோன்றுவது... மிரட்டலாக இருப்பதால் ரசிகர்களுக்கு படத்தை பற்றிய குறைந்தபட்ச எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

1 More update

Next Story