''விஜய் படத்தைப்போல் சிவகார்த்திகேயன் படத்திலும்...'' - ஏ.ஆர்.முருகதாஸ்

மதராஸி படத்தில் கேமியோ வேடத்தில் நடித்துள்ளதாக ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.
சென்னை,
மதராஸி இசை, டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயனை பார்த்து பலர் ஊக்கம் அடைந்து, சினிமாவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது படமான ‘மதராஸி’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசை அமைக்கும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத், சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது ஏ.ஆர்.முருகதாஸ் பேசுகையில்,
''நடிகர் சிவகார்த்திகேயனை பார்த்து பலர் ஊக்கம் அடைந்து, சினிமாவுக்கு வந்துள்ளார்கள். இதற்கு முன்பு நான் இயக்கிய மூன்று விஜய் படங்களிலும் சிறிய கேமியோ வேடங்களில் நடித்திருப்பேன். மதராஸி படத்திலும் ஒரு காட்சியில் நான் நடித்திருக்கிறேன்'' என்றார்.






