ஜெயம் ரவியின் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் பாடல் அப்டேட்

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் 'இட்ஸ் பிரேக் அப்டா' பாடல் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஜெயம் ரவியின் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் பாடல் அப்டேட்
Published on

சென்னை,

'பிரதர்' படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. இதில், நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். "வணக்கம் சென்னை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கி உள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தின் முதல் பாடலான 'என்னை இழுக்குதடி' கடந்த மாதம் 22ம் தேதி வெளியானது. விவேக் எழுதிய இப்பாடலை ஏ. ஆர். ரகுமான் மற்றும் தீ இணைந்து பாடி இருந்தனர். இப்படத்தின் 2வது பாடலான 'லாவெண்டர் நேரமே' பாடலை அலெக்ஸாண்ட்ரா ஜாய் மற்றும் ஆதித்யா ஆகியோர் இணைந்து பாடியிருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் 3வது பாடலான 'இட்ஸ் பிரேக் அப்டா' பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்போஸ்டரில் நித்யா மேனன் கையில் சுத்தியுடம் மிகவும் கோபமாக காட்சியளிக்கிறார். இந்த பாடல் ஒரு பெண் தன் காதலனை பிரேக் அப் செய்யும் பாடலாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14ம் தேதி வெளியாகவுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com