பிரபாஸின் ’ஸ்பிரிட்’-ல் இணையும் தனுஷ் பட நடிகை?

திரிப்தி டிம்ரி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
பிரபாஸின் ’ஸ்பிரிட்’-ல் இணையும் தனுஷ் பட நடிகை?
Published on

சென்னை,

பாலிவுட் நடிகை கஜோல் தெலுங்கில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டாலும், அவர் ஒருபோதும் நேரடி தெலுங்கு படத்தில் நடித்ததில்லை. இப்போது, பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் படப்பிடிப்பில் கஜோல் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

சமீப காலமாக துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவர் "ஸ்பிரிட்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெரிய படங்களில் ஒன்றான "ஸ்பிரிட்"-ன் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. அர்ஜுன் ரெட்டி மற்றும் அனிமல் ஆகிய வெற்றிப்படங்கள் மூலம் பிரபலமான இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா, இந்த படத்தை இயக்கி வருகிறார்.

திரிப்தி டிம்ரி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த பான்-இந்திய பெரிய பட்ஜெட் படம் 2027-ம் ஆண்டு வெளியாக உள்ளதாக தெரிகிறது.

கஜோல் தமிழில், பிரபு தேவாவுடன் 'மின்சார கனவு' மற்றும் தனுஷுடன் 'வேலையில்லா பட்டதாரி 2' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com