கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் "லோகா" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

துல்கர் சல்மான் தயாரிப்பில் டொமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் உள்ளிட்டோர் நடிக்கும் ‘லோகா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
மலையாள சினிமாவில் மின்னல் முரளி படத்தை தொடர்ந்து அடுத்ததாக சூப்பர் ஹீரோ ஜானரில் 'லோகா' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் கல்யாணி இதுவரை நாம் பார்த்திராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை துல்கர் சல்மானின் வேபாரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க டொமினிக் அருண் இயக்கியுள்ளார். இப்படம் பல பாகங்களில் ஒரு சினிமாடிக் யூவினர்சில் உருவாக இருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
Related Tags :
Next Story






