கமல் விவகாரம்...தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

கர்நாடகாவில் 'தக் லைப்' படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
சென்னை,
கர்நாடகா திரைப்பட சம்மேளனத்திற்கு தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
கமல்ஹாசனின் தக் லைப் திரைப்படத்தை சுமூகமாக வெளியிட அனுமதிக்குமாறு கர்நாடகா திரைப்பட சம்மேளனத்திற்கு தமிழ்நாடு நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
படத்தின் வெளியீட்டை நிறுத்துவது அல்லது ஒத்திவைப்பது இணக்கமான உறவை நிரந்தரமாக சேதப்படுத்தும் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளது.
கன்னடம் , தமிழிலிருந்து உருவானது என்று கமல்ஹாசன் கூறியதற்கு எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்து, கர்நாடகாவில் 'தக் லைப்' படம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






