கொடைக்கானலில் கமல்ஹாசன்.. வைரலாகும் வீடியோ


கொடைக்கானலில் கமல்ஹாசன்.. வைரலாகும் வீடியோ
x

கொடைக்கானலில் தற்போது மிக அழகான கிளைமேட் நிலவுகிறது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் என்பது சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இருக்கிறது. தினமும் பலர் சுற்றுலா சென்று வருகிறார்கள். கொடைக்கானலில் தற்போது மிக அழகான கிளைமேட் நிலவுகிறது. காலையில் கடும் குளிருடன் பனிமூட்டம் அதிகமாக இருக்கிறது. மாலையிலும் கடுமையான பனிமூட்டமும் குளிரும் இருக்கிறது

இந்தநிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னையில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஓய்வுக்காக கொடைக்கானல் சென்றுள்ளார். கொடைக்கானலில் உள்ள அவரது தோட்டத்தில் இருந்த நிலையில், நேற்று கொடைக்கானலில் உள்ள வில்பட்டி சாலை பகுதி மற்றும் தற்போது டிரெண்ட் ஆகி வரக்கூடிய பெப்பர் அருவிக்கு செல்லக்கூடிய சாலைகளில் காரில் கிளைமேட்டை அனுபவித்தும் கடும் பனிமூட்டத்தை அனுபவித்து ஜாலியாக உலா மேற்கொண்டார்.

1 More update

Next Story