ஏவிஎம் சரவணன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் சொன்ன கமல்ஹாசன்


Kamal Haasan meets AVM Saravanans family and offers condolences
x

ஏவிஎம் சரவணன் நேற்று காலமானார்.

சென்னை,

இந்திய திரையுலகில் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம். இதனை தொடங்கிய ஏ.வி. மெய்யப்பன் பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். இவரது மகனான ஏவிஎம் சரவணன் தந்தைபோலவே முக்கிய திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

1958ஆம் ஆண்டு முதல் ஏவிஎம்மிற்கு தலைமையேற்று திரைப்பட தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஏவிஎம் சரவணன், ‘நானும் ஒரு பெண்’, ‘சம்சாரம் அது மின்சாரம்’, ‘சிவாஜி’, ‘வேட்டைக்காரன்’, ‘மின்சார கனவு’, ‘அயன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார்.

வயது மூப்பினால் ஏற்படும் உடல்நல பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஏவிஎம் சரவணன் குடும்பத்தினரை சந்தித்து நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் ஆறுதல் சொல்லி இருக்கிறார்.

1 More update

Next Story