“கம்பி கட்ன கதை” படத்தின் முதல் பாடல் வெளியீடு

ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் நட்டி நடித்துள்ள ‘கம்பி கட்ன கதை’ படம் அக்டோபர் 17ம் தேதி வெளியாகிறது.
Published on

சென்னை,

விஜய் நடிப்பில் வெற்றிப்பெற்ற யூத் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி பிறகு நடிகராக வலம் வருபவர் நடிகர் நட்டி என்னும் நட்ராஜ். இவர் 'கர்ணன்', 'மகாராஜா' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். சமீபகாலமாக ரசிகர்களின் வரவேற்பை பெறும் விதமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நடிகர் நட்டி, ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் கம்பி கட்ன கதை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சிங்கம்புலி, மனோபாலா, கராத்தே கார்த்தி, முத்துராமன், சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் சதுரங்கவேட்டை பட பாணியில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படம் வருகிற 17ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

இந்தநிலையில் கம்பி கட்ன கதை படத்தின் ஜல பல ஜல பாடல் வெளியாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com