10 வருடத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கும் காம்னா

நடிகை காம்னா "கேராம்ப்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு திரை உலகில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு முன்னணி கதாநாயகியாக இருந்தவர் காம்னா. திரை உலகில் முன்னணி கதாநாயகிகள் பலர் திருமணமாகி சினிமாவை விட்டு ஒதுங்கி விடுகின்றனர். அந்த வகையில் சினிமா நடிப்பில் இருந்து விலகி இருந்த காம்னா 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.
தெலுங்கில் உருவாகி உள்ள "கேராம்ப்" படத்தில் காம்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வருகிற 18-ந்தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. ஜெயம்ரவியுடன் இதய திருடன், ஜீவனுடன் ‘மச்சக்காரன்’ மற்றும் ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா போன்ற தமிழ் படங்களில் காம்னா நடித்துள்ளார்.
Related Tags :
Next Story






