'கண்ணப்பா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு


கண்ணப்பா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
x
தினத்தந்தி 10 April 2025 12:46 PM IST (Updated: 8 May 2025 9:23 AM IST)
t-max-icont-min-icon

வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி உள்ள 'கண்ணப்பா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியாக இருந்தநிலையில், சொன்ன தேதியில் கண்ணப்பா திரையரங்குகளில் வெளியாகாது என படக்குழு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, வி எப் எக்ஸ் பணிகளுக்கு இன்னும் காலம் தேவைப்படுவதாகவும் , இதனால் ரிலீஸ் சிறிது தாமதமாகும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற ஜுன் 27-ந் தேதி உலக அளவில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

1 More update

Next Story