"கண்ணப்பா" பட வசூல் இத்தனை கோடியா?


கண்ணப்பா பட வசூல் இத்தனை கோடியா?
x
தினத்தந்தி 29 Jun 2025 4:40 PM IST (Updated: 1 Sept 2025 10:56 PM IST)
t-max-icont-min-icon

வரலாற்று புதினத்தை தழுவி உருவாகியுள்ள 'கண்ணப்பா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் உலகம் முழுவதும் கடந்த 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் எனப் பல மொழிகளிலும் பான்-இந்தியா திரைப்படமாக கண்ணப்பா உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'கண்ணப்பா' திரைப்படம் வெளியான 2 நாட்களில் ரூ. 16 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும், வசூல் குறித்த அதிகாரபூர்வ தகவல் படத் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து இன்னும் வெளியிடப்படவில்லை

1 More update

Next Story