'' இதற்காக 22 வருடங்கள் காத்திருந்தேன்'' - கண்ணப்பா பட நடிகர்


Kannappa: I have been waiting for this for 22 years.. Manchu Vishnu
x

''கண்ணப்பா'' படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார்.

சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் ''கண்ணப்பா'' படத்தை பார்த்து பாராட்டியதாக நடிகர் விஷ்ணு மஞ்சு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக விஷ்ணு பகிர்ந்துள்ள பதிவில்,

''நேற்று இரவு, ரஜினிகாந்த் ''கண்ணப்பா'' படத்தை பார்த்தார். படத்தை பார்த்து முடித்து என்னை இறுக்கமாக கட்டியணைத்தார். கண்ணப்பாவை மிகவும் பிடித்திருப்பதாக கூறினார். ஒரு நடிகராக இதற்காக நான் 22 வருடங்களாகக் காத்திருந்தேன்.

இன்று, நான் நன்றாக உணர்கிறேன். வருகிற 27-ம் தேதி கண்ணப்பா வெளியாகிறது. உலகம் சிவபெருமானின் மாயாஜாலத்தை உணர்வதை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story