அல்லரி நரேஷ்-காமக்சி நடித்த திகில் படம்...புதிய பாடல் வெளியீடு


Kannodili Kalanodhili song from Allari Naresh’s 12A Railway Colony is out now
x

இந்தப் படம் வருகிற 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

நகைச்சுவை வேடங்களுக்குப் பெயர் பெற்ற அல்லரி நரேஷ், அறிமுக இயக்குனர் நானி காசர்கடாவுடன் இணைந்து திகில் திரில்லர் படமான 12எ ரெயில்வே காலனியில் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்திலிருந்து "கன்னோடிலி கலானோடிலி" என்ற பாடல் வெளியாகி உள்ளது. இப்பாடலை ஹேஷாம் அப்துல் வஹாப் பாடியுள்ளார். தேவ் பவார் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

இப்படத்தில் காமக்சி பாஸ்கர்லா, சாய் குமார், விவா ஹர்ஷா, கெட்அப் ஸ்ரீனு, சதாம், ஜீவன் குமார், ககன் விஹாரி, அனிஷ் குருவில்லா, மதுமணி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்த 12எ(12A) ரெயில்வே காலனி படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்துள்ளார்.

1 More update

Next Story