'காந்தாரா' பட மற்றொரு நடிகரும் மரணம்...திருமண விழாவில் நிகழ்ந்த சோகம்


Kantara 2 actor Rakesh Poojary dies of heart attack at 34
x
தினத்தந்தி 12 May 2025 6:03 PM IST (Updated: 12 May 2025 6:04 PM IST)
t-max-icont-min-icon

கன்னட திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் ராகேஷ் பூஜாரி

ஐதராபாத்,

கன்னட திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் ராகேஷ் பூஜாரி(34). இவர் தற்போது ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வரும் 'காந்தாரா 2' படத்க்தில் நடித்து வந்தார். இதற்கிடையில், நேற்று இவர் உடுப்பியில் நடந்த திருமண மெஹந்தி விழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது நண்பர்களுடன் உற்சாகமாக நடனமாடிக்கொண்டிருந்த அவர் திடீரென கீழே விழுந்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் ராகேஷை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராகேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது மறைவு கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே 'காந்தாரா 2' படத்தில் நடித்து வந்த ஜூனியர் நடிகர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தநிலையில், தற்போது ராஜேஷ் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

1 More update

Next Story