’சாவா’ சாதனையை முறியடித்த காந்தாரா சாப்டர் 1

காந்தாரா சாப்டர் 1 இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த இந்திய படமாக மாறியுள்ளது.
சென்னை,
உலகளாவிய பாக்ஸ் ஆபீஸில், காந்தாரா சாப்டர் 1 இப்போது ரூ. 818 கோடியைத் தாண்டியுள்ளது.
விக்கி கவுஷல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த சாவா திரைப்படம் மொத்தம் ரூ. 807 கோடி வசூலித்த நிலையில், காந்தாரா தற்போது சாவா திரைப்படத்தை முந்தியுள்ளது.
இதன் மூலம் காந்தாரா சாப்டர் 1 இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த இந்திய படமாக மாறியுள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா சாப்டர் 1’ படம் கடந்த 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் ருக்மணி வசந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆங்கிலத்திலும் வெளியாக உள்ளதால் விரைவில் ரூ.1,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story






