''காந்தாரா 2'' படத்தில் இணைந்த பிரபல நடிகை - கவனத்தை ஈர்க்கும் பர்ஸ்ட் லுக்

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ''காந்தாரா'' கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
காந்தாராவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி அதன் 2-ம் பாகத்தில் பணியாற்றி வருகிறார், இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படப்பிடிப்பு முடிவடைந்து, தயாரிப்பாளர்கள் போஸ்ட் புரொடக்சன் வேலைகளில் மும்முரமாக உள்ளனர். இந்நிலையில், நடிகை ருக்மணி வசந்த் இந்த படத்தில் கனகவதியாக நடித்துள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் ருக்மணி வசந்த் மிகவும் அழகாக ஒரு இளவரசிபோல காணப்படுவது கவனத்தை ஈர்த்துள்ளது. அஜனீஷ் லோகநாத் இசையமைத்துள்ள இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
Related Tags :
Next Story






