சிரஞ்சீவியின் அடுத்த படத்தில் கார்த்தி?

சிரஞ்சீவி படத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகர் கார்த்தி தற்போது தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிஸியான நட்சத்திரங்களில் ஒருவராக உள்ளார், வா வாத்தியார், சர்தார் 2 , ஹிட் 4, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கைதி 2 உள்ளிட்ட படங்களை கை வசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்தி, தெலுங்கு ஹீரோ படத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரஞ்சீவியும், இயக்குனர் பாபியும் வால்டர் வீரய்யா படத்திற்கு பிற்கு மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தில் கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
Related Tags :
Next Story






